1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:19 IST)

தனுசு: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி தொழில் ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 

மேலும்  அக்டோபர் 4 ந்தேதி இரவு லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அயன,சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி லாப  ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: ஆடம்பரமாக வாழ ஆசைப்படாத தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் தொழிலில் அபரிவிதமான வெற்றிகளை எதிர்பார்க்கலாம்.. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். சொத்துகள் வாங்க முடிவு செய்வீர்கள்.
 
குடும்பாதிபதி சனி பகவான் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன் - மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் கேது பகவான் சேர்க்கை உங்கள் குடும்ப நிம்மதியை குலைக்கலாம். கவனம் தேவை.நீங்கள் சொல்ல விரும்புவதை தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வது பிரச்சனைகளைத் தவிர்க்கும்.
 
தொழில் ஸ்தானத்தில் சூர்ய பகவான் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் லாபம் தரும் வகையிலேயே இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும்  யோகமான காலமாக இருக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பவர்களுக்கும் லாபம் கிடைக்கும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். சிலருக்கு எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெண்களுக்கு கணவனுடன் இருந்து வந்த மனசங்கடங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். மாணவர்கள் - ஆசிரியர் உறவு சுமூகமாக இருக்கும். இதனால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பொறுமை காப்பதன் மூலம் சில நல்ல  பலன்களையும் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும்.
 
அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். 
 
மூலம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். 
 
பூராடம்: இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை.  மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
 
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.  மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும்.  உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.
 
பரிகாரம்: நாக தெய்வங்களுக்கு மஞ்சள் கொடுத்து வழிபட பணப்பிரச்சனை தீரும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 4, 5.
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர்  27, 28, 29.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.