புதன், 4 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (14:49 IST)

மகரம்: ஆனி மாத ராசி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் குரு (வ) -  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய  ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் (வ) - ரண, ருண  ஸ்தானத்தில் ராஹூ, புதன்(வ), சூர்யன்   -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, சனி  (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:
 
15-06-2020  காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-07-2020 அன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
எடுத்த காரியங்களை முகம் சுளிக்காமல் செய்து விடும் மகர ராசியினரே இந்த மாதம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்களை தோன்றினாலும் முடிவில்தெளிவு உண்டாகும்.தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை  காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக  பேசுவது நன்மை தரும்.
 
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை எழுந்தால் பேசி சமாளிப்பது  நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
 
தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில்  விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும்.
 
கலைத்துறையினர் திறம்பட செயல்பட்டு அனைவரிடமும் பாராட்டு பெறுவீர்கள். அதன் மூலம் புதிய ஆர்டர்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் வந்துசேரும்.
 
அரசியல்துறையினருக்கு மனம் மகிழும்படியான செய்திகள் வந்து சேரும். மேலிடத்திலிருந்து பணி நிமித்தமாக முக்கிய செய்திகள் வந்து சேரும். 
 
பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும்.
 
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
உத்திராடம்:
 
இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில்  வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவார்கள். லாபம் கூடும்.  
 
திருவோணம்:
 
இந்த மாதம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின்  ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். 
 
அவிட்டம்:
 
இந்த மாதம் பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விடவேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
 
பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி  உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 19, 20