செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (14:41 IST)

தனுசு: ஆனி மாத ராசி பலன்கள்

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில்  கேது, சனி (வ) - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் -  சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் (வ) -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு, புதன்(வ), சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:
 
15-06-2020  காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-07-2020 அன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.
 
பலன்:
 
பிறர் மனதிற்கு தெம்பு தரும் வகையில் வார்த்தைகளை பேசும் தனுசு ராசியினரே  இந்த மாதம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
 
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.
 
தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.
 
கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும். 
 
அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.  உங்கள் கருத்துக்களுக்கு மேலிடத்தில் மதிப்பு இருக்கும்.
 
பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும்.  கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.
 
மூலம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.
 
பூராடம்:

இந்த மாதம் கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி  படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.
 
உத்திராடம்:
 
இந்த மாதம் எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையை கண்டு பயப்படாமல் கையாள்வீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். 
 
பரிகாரம்: குருவுக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 24, 25,
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 16, 17, 18; ஜூலை 14, 15.