செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (16:23 IST)

அக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன், செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  புதன், சந்திரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ஸ்தானத்தில் சனி , கேது -  அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
பாசத்தால் அனைவரையும் கட்டிப்போடும் கடக ராசி அன்பர்களே இந்த மாதம் நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.  பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.

அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

பூசம்:
இந்த மாதம் சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும்  சமாளிப்பது  நல்லது.

பரிகாரம்: அம்மனுக்கு ஐந்து முக தீபம் ஏற்றி பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்:  3, 4, 30, 31