ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (08:51 IST)

டிசம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

 
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் கேது, சூர்யன், புதன்  - பாக்கிய ஸ்தானத்தில் சனி  - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.  
 
கிரகமாற்றங்கள்:
10-12-20 அன்று காலை 6.02 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார். 
12-12-20 அன்று மாலை 3.10 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-12-20 அன்று மாலை 3.43 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
16-12-20 அன்று காலை 3.09 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
27-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
இந்த மாதம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
 
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். 
 
பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக  முடியும்.
 
கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.
 
அரசியல் துறையினருக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். பணியின் நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். 
 
மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
 
அசுபதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
 
பரணி:
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
 
கார்த்திகை:
இந்த மாதம்  எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும்.
 
பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8