திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (15:55 IST)

கும்பம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்) - பலன்: அதிக போட்டி பொறாமைகளை சந்திக்க காத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த  காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல்  இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த  பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான  பயணங்கள் இருக்கும்.
 
குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான  வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
 
கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள்  வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.  நிதானம் தேவை.
 
அரசியல்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும்  உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கட்சியில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை  உடனுக்குடன்  போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.
 
அவிட்டம் 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் உடல்நிலையும் சிறப்பாக அமையும் என்று கூறமுடியாது. உத்தியோகஸ்தர்களும் அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய  சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள்  அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
 
சதயம்:
 
இந்த மாதம் மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால்  ஓரளவுக்கு முன்னேறமுடியும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.  உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். 
 
பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:
 
இந்த மாதம் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால்  அனுகூலமான பலனை அடைவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் மட்டும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது  நல்லது.
 
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சனேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 1, 2.
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 26, 27.