ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (14:17 IST)

துலாம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) - பலன்: வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்யத் துடிக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். 

எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும்,  நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது  எச்சரிக்கை தேவை.
 
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம்  ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.
 
குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும்  வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
 
பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர்  பார்க்கலாம்.
 
கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம்.  மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.
 
அரசியல்துறையினருக்கு  கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான  ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.
 
மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்..
 
சித்திரை 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். முக்கிய விஷயங்களை பற்றி பேசலாமா வேண்டாமா என்ற குழப்பமே நீண்ட நேரமாக இருந்து தொல்லையில் ஆழ்த்தும்.  தொழில் ரீதியான படிப்புகளை தொடரலாம். உடல் நலனில் கவனம் தேவை. சக ஊழியர்கள்  ஆதரவாக நடந்து கொள்வார்கள். உள்ளது உள்ளபடி பேசுவதற்கு முற்படுவீர்கள். சில நேரங்களில் குடும்பத்தாருடன் மனக் கசப்பு  உருவாகலாம்.
 
சுவாதி:
 
இந்த மாதம் தங்களது அஜாக்கிரதையால் பொருள்கள் களவு போகக் கூடும். புதிதாக வாகனம் வாங்கவேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதை  தள்ளிப் போடுவது நன்மையாகும். வருமானத்தில் குறைவு வராது. பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். முன்னோர்கள் வழிபாடு  செய்யுங்கள். நன்மையை பெற அதிகமாக உழைப்பீரக்ள். மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை மேற்கொள்வீர்கள்
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: 
 
இந்த மாதம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பெருமை சேரும்.  சகோதர, சகோரதரிகளிடம் வேற்றுமை பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். உங்களை வெற்றிபாதைக்கு உங்கள்  மீது நம்பிக்கை வைத்த பெரியோர் அழைத்துச் செல்வர்.
 
பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்து சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 23, 24, 25.
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 18; செப்டம்பர் 12, 13, 14.