செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (13:26 IST)

கும்பம்: ஆடி மாத ராசி பலன்கள்

அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம் - கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில்  குரு (வ)  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்: இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலையை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில்  கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய்  இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.
 
தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு  முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.
 
குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக  செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.
 
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.
 
அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு  உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.
 
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
 
அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்டமாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை  தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.
 
சதயம்: இந்த மாதம்  மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில்  திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை  தள்ளிப்போடுவது நல்லது.
 
பூரட்டாதி 1, 2, 3  பாதம்: இந்த மாதம் சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம்  தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது  நன்மை தரும்.
 
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 29, 30, 31.