திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (13:27 IST)

தனுசு: ஆடி மாத ராசி பலன்கள்

மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் - கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - விரைய ஸ்தானத்தில்  குரு (வ)  என கிரகங்கள் வலம்  வருகின்றன.
பலன்: இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு  கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். எனினும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
 
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக  உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
 
குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும்.  அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
 
பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.
 
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கோபத்தைக் குறைத்து  தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது  முன்னேற்றத்திற்கு உதவும்.
 
மூலம்: இந்த மாதம் சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கல். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு  காணப்படும்.
 
பூராடம்: இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை  தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.  இடமாற்றத்துடன்  பதவி உயர்வு  சிலருக்கு கிடைக்கலாம்.
 
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பபிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம்  மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.
 
பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 1, 2
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 25, 26.