மிரள வைக்கும் ‘கங்குவா’ டீசர்.. சூர்யாவின் அசத்தல் நடிப்பு..!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று தாமதமாக சில நிமிடங்களுக்கு முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் அட்டகாசமாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த டீசரின் ஆரம்ப காட்சிகளே பிரமாண்டமாக இருந்தது என்பதும் குறிப்பாக மனித குவியல்கள் காட்சி மிரள வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமான படகுகளின் அணிவகுப்பு, போர் முரசு கொட்டும் காட்சிகள், சூர்யாவின் அறிமுக காட்சிகள் ஆகியவை சூர்யா ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமைந்துள்ளது
51 வினாடிகள் மட்டுமே இருந்தாலும் இந்த டீசர் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தேர்தலுக்குப் பின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.