1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (14:14 IST)

நீயெல்லாம் அட்வைஸ் கொடுக்குற நிலைமைக்கு நான் வந்துட்டேனா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கடந்த சீசனில் பங்கேற்ற யாஷிகா மற்றும் மஹத் இருவரும் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். அவர்களை வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் வரவேற்று குடும்பத்தில் ஒருவராக இணைத்துக்கொண்டனர். 


 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் யாஷிகா மற்றும் மஹத் இருவரும்  இவர்களை வைத்து வேறு எதாவது செய்யலாமா என்று கேட்கின்றனர். பின்னர் பிக்பாஸ் தர்ஷனை மன்னர் போல அலங்கரித்து அவர் சொல்லும்  அனைத்து பணிவிடைகளையும் செய்யவேண்டும் என கூறுகிறார். பின்னர் சாண்டி மன்னரின் வருகையை அறிவிக்கும் விதத்தில் "ராஜாதி ராஜா" என்று அழைக்கிறார். கவின் மற்றும் ஷெரின் மன்னர் தூரதேசம் செல்ல நினைக்கும் இடத்திற்கு தூக்கி செல்கின்றனர். இப்படியா இன்று பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருக்கிறது. 
 
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் சாண்டியின் மைண்ட் வாய்ஸ் என கூறி " நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் கொடுக்குற நிலைமைக்கு நான் வந்துட்டேனாடா என மஹத்தை கலாய்த்து வருகின்றனர்.