வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (16:39 IST)

‘மதயானைக் கூட்டம்’ இயக்குநரின் ‘இராவண கோட்டம்’ ட்ரெய்லர் ரிலீஸ்..!

ravana kottam
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மத யானை கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இவர் தற்போது இராவண கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
சாந்தனு பிரபு உட்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒப்பாரி பாடலுடன் தொடங்கும் இந்த படத்தின் டிரைலர் இரண்டு ஜாதிகள் இடையே நடந்த கலவரம் குறித்த பிரச்சனையை அலசுகிறது என தெரிகிறது. 
 
அதிரடி ஆக்சன் காட்சிகள் ரத்தம் கிராமத்திற்கு செண்டிமெண்ட் காட்சிகள் காதல் என ஒரு ஒட்டுமொத்த கலவையாக இந்த படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். சாந்தனு ஜோடியாக இந்த படத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ளார். இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
 
Edited by Siva