செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (19:21 IST)

ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷங்க’ டிரைலர்!

veetla visheshanga
ஆர் ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க என்ற திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
இந்த ட்ரைலரில் சத்யராஜின் மனைவி ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் தர்மசங்கடத்தில் இருக்கையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யும் கேலி கிண்டல்களை அவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதையும் நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது
 
சத்யராஜ், ஊர்வசி, ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திக் முத்துகுமார் இயக்கியுள்ளர். இவர் ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்