செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (07:39 IST)

சுஷாந்த் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட காதலியின் வீடியோக்கள்..!

பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

அந்தவகையில் சுஷாந்தின் மரணம் குறித்து அவரது காதலியான  ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணைநடைபெற்றது. அந்த விசரணையில், இருவரும் காதலித்து வந்ததுடன் லிவ்-இன் ரிலேஷனில் இருந்து வந்தனர் என்றும் கூறினார். நவம்பரில் திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் இடையில் சண்டை வந்ததால் ரியா சுஷாந்தின் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது சுஷாந்தின் வீட்டில் எடுக்கப்பட்ட ரியா சக்ரவர்த்தியின் வீடியோக்கள் சிலவற்றை   இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.லாக்டவுன் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்களை சுஷாந்தின் ரூம்மேட் ஆன சித்தார்த் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Caught pretending to read