திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:43 IST)

தனியாவே இருக்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு - கலங்கிய பவானி ரெட்டி!

பிக்பாஸ் வீட்டில் பவானி ரெட்டி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். 33 வயதாகும் அவர் பார்ப்பதற்கு 21 வயது இளம் பெண் போன்று கியூட்டாக இருப்பது தான் இளசுகளை ஈர்க்கிறது. அது மட்டுமல்லாது அவரின் தன்மையான குணம் தான் அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாக காரணமாக இருக்கிறது. 
 
கடந்து வந்த பாதை டாஸ்கில் பாவனி தனது கணவரின் இறப்பு குறித்து தன் கருத்தை பதிவு செய்தார். 2017ல் பிரதீப் குமார் என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்துக்கொண்ட பவானிக்கு வாழ்க்கை மிக குறுகிய நாட்களிலே முடிவுக்கு வந்துவிட்டது. 
 
ஆம், அவரின் கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார். கணவர் இறந்த போது எனக்கு அழுகையே வரவில்லை அவர் மீது கோபம் தான் இருந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டோம். அவ்வளவு கனவு கண்டோம் நீ நடுவுல விட்டுவிட்டு போயிட்டியே.... வாழ்க்கையில் தனியாவே இருக்கவேண்டும் என்று என் தலையில் எழுதி வைத்திருக்கிறது போல என கூறி புலம்பி அழுதார். 
 
இவ்வளவு கஷ்டங்களை மனதில் சுமந்துக்கொண்டு சிரிக்குற உங்களது குணம் தான் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. பவானிக்கு ஆறுதலாக இங்கு நிறைய பேர் இருக்கிறோம் என கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர் ரசிகர்கள். நமக்கு மிகவும் பிடிச்சங்க நம்மை  இடையில் விட்டுட்டு போகும் போது வரும் வலி இருக்கே அது மரணத்தைவிட கொடுமையானது.