"இங்க எவனும் மனுஷன மனுஷனா பாக்குல" ஜிவி பிரகாஷின் "ஐங்கரன்" டிரெய்லர்!

Last Updated: புதன், 14 ஆகஸ்ட் 2019 (19:10 IST)
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் "ஐங்கரன்" திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


 
டெக்னலாஜி வில்லத்தனத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் கருத்தை மைய கருவாக கொண்டு உருவாகியுள்ள "ஐங்கரன்"  படத்தை ரவி அரசு இயக்கியுள்ளார். காமன்மேன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். 
 
இரன்டு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தான் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ளது. ரிலீசுக்கு தயாராகி வேகமெடுத்துள்ள நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
“இங்க ஆகாயத்துக்கு ராக்கெட் விடவும் விஞ்ஞானி இருக்கான்.. ஆழ்கடல்ல ஆராய்ச்சி பண்றதுக்கும் விஞ்ஞானி இருக்கான் ஆனா அத அங்கீகரிக்கிறதுக்கான அறிவுதான் இல்ல”,  போன்ற வசனங்ககள் உண்மையை உலகத்துக்கு காட்டுகிறது. 
 
மேலும் “உயிருக்கு மதிப்பு இங்க எங்கங்க இருக்கு? அரசு நம்மள டேட்டாவா பாக்குது,  அரசியல்வாதி நம்மள் ஓட்டா பாக்குறான்,  வியாபாரி நம்மள கஸ்டமரா பாக்குறான்..யாரும் யாரையும் இங்க மனுஷன மனுசனாவே பாக்குறதில்ல” போன்ற பவர்புல் வசனங்கள் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
 
ஐங்கரன் திரைப்படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   


இதில் மேலும் படிக்கவும் :