1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (19:29 IST)

அருண்விஜய்யின் ‘பார்டர்’ டிரைலர் ரிலீஸ்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘பார்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.
 
இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அருண் விஜய், ரெஜினா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரு அட்டகாசமான தேசபக்தி உள்ள ஆக்சன் படம் என்பது டிரைலரில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அருண் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அருண் விஜய்க்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
 
சாம் சி.எஸ். கம்போஸ் செய்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.