1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (17:27 IST)

இந்திக்கு செல்கிறது ‘தடம்’: அருண்விஜய்யின் கேரக்டரில் யார்?

அருண் விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தடம்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது ஹிந்திக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண்விஜய் நடித்த கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் இந்த படத்தின் நாயகியாக மிருணாள் தாகர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வர்தன் கேட்கர் என்பவர் இயக்க இருப்பதாகவும் இவர் இந்த படத்தின் மூலம்தான் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
‘தடம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வித்யாவின் கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தடம்’ திரைப்படம் ஹிந்தியிலும் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்