ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (15:38 IST)

இப்போதான் அவர் சுரேஷ் சக்ரவர்த்தி… ஆனா அப்போ அமலா சுரேஷ்!

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு காலத்தில் நடிகை அமலாவுக்கு மேனேஜராக இருந்தவராம்.

பிக்பாஸ்லில் கலந்து கொண்டு முதல் நாளில் இருந்தே கரைச்சலைக் கொடுக்க ஆரம்பித்துள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி. 2000 க்கு பின் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து வரும் 90ஸ் கிட்ஸ்களுக்கு யார்ரா இவரு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவர் நடித்துள்ள திரைப்பட மற்றும் சீரியல் காட்சிகள் இப்போது இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகிறது.

ஆனால் அவரைப் பற்றி இன்னுமொரு தெரியாத பக்கமும் இருக்கிறது. நடிகை அமலா தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் அவருக்கு மேனேஜராக இருந்தவர்தானாம் இவர். அப்போது திரையுலகில் அவரின் பெயர் அமலா சுரேஷாம். அமலா திருமணம் ஆகி சினிமாவை விட்டு விலகிய பின்னர் சுரேஷ் ஆஸ்திரேலியா போய் செட்டில் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.