திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (18:29 IST)

கொம்பு வச்ச சிங்கம் –சசிக்குமார் பட அப்டேட்

சசிக்குமாரின் அடுத்த படமான ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சசிக்குமாரின் சினிமா வாழ்க்கையில் இது சோதனைக்காலம். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மற்றும் உறவினர் அசோக்குமாரின் மரணம் மற்றும் அவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்விகள் என பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கொடிவீரன் மற்றும் அசுரவதம் ஆகிய படங்கள் வசூல்ரீதியாகவும் விமர்சன் ரீதியாகவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதையடுத்து அவர் நடித்து முடித்துள்ள நாடோடிகள் 2 படமும் ரிலீசாகாமல் உள்ளது. தற்போது சசிக்குமார் பெரும் கடன் சுமையில் உள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கொஞ்ச காலத்திற்கு தயாரிப்புப் பணிகளை விலக்கி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சசிக்குமார். ஏற்கனவே தனுஷ் நடிக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து தனக்கு சுந்தரபாண்டியன் மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரமும் இசையமைப்பாளராக திபு நினன் தாமஸும் பணியாற்றி வருகின்றனர். மதுரைப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.