வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (09:47 IST)

ஷங்கர் ராம்சர்ண் தேஜாவின் கேம்சேஞ்சர் முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமன் ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவரை ஷங்கர் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவர்தான் இசையமைத்துள்ளார்கள். இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமம் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜருகண்டி என்ற பாடல் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 22 அல்லது 23 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.