செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (15:25 IST)

விஜய் டிவியில் பிக்பாஸ் வந்துடுச்சு… அத சமாளிக்க சன் டிவி ஒளிபரப்பும் சீரியல்!

விஜய் டிவியில் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் ரசிகர்களை கவர திருமகள் என்ற தொடரை அந்த நேரத்தில் ஒளிபரப்ப உள்ளதாம் சன் தொலைக்காட்சி.

விஜய் டிவி யின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக டி ஆர் பியில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நான்காம் சீசன் ஒளிபரப்பாக உள்ள நிலையில் பார்வையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பிக்பாஸ் ஒளிபரப்பு நேரத்தில் திருமகள் என்ற தொடரை ஒளிபரப்ப உள்ளதாம் சன் தொலைக்காட்சி. இந்த தொடரின் மூலம் பார்வையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறதாம் சன் தொலைக்காட்சி.