வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர்கள் அணிக்கு வேண்டாம்… யுவ்ராஜ் சிங் கருத்து!

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று தற்போது சொல்லப்படுகிறது. அவர் அணியில் இடம்பெற்றாலும் அவருக்கான இடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் என பல இளம் வீரர்கள் டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த டி 20 அணிக்கு  தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யுவ்ராஜ் சிங் முக்கியமான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். அதில் “டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் டி 20 அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இருக்க தேவையில்லை. அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும். அணிக்கு இளம் வீரர்கள் தேவை” எனக் கூறியுள்ளார். ரோஹித் ஷர்மாவுக்கு தற்போது 37 வயதும் விராட் கோலிக்கு 35 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.