தனுஷின் ''நானே வருவேன்'' படத்தின் சென்சார் தகவல் !
தனுஷின் நானே வருவேன் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் – தனுஷ் – ஐந்தாவது முறையாகவும், இவர்களுடன் யுவன் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்குப் பின், கலைப்புலி எஸ்தாணு தயாரிப்பில் உருவாகியுள படம் நானே வருவேன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 2 மணி நேரம் தான் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும் எனவும், ரசிகர்கள் சலிக்காமல் உட்கார்ந்து பாம் பார்க்க ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நானே வருவேன் படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும்,பொன்னியின் செல்வன் வெளியாகும் ஒரு நாளுக்கு முன்னதாக இப்பட வெளியாவதால், அப்படத்திற்கு போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.