வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (22:09 IST)

அனிருத் மறுப்பு: 'மாரி 2' படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்?

தனுஷின் 'மாரி' திரைப்படம் மிகப்பெரிய  வெற்றி இல்லை என்றாலும் ஓரளவு சுமாரான வெற்றியை பெற்றது. ஆனால் அந்த வெற்றிக்கும் முக்கிய காரணம் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இல்லாத 'விஐபி 2' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது 'மாரி 2' படத்திற்கு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனிருத்தை தொடர்பு கொண்டாராம் தனுஷ்



 
 
ஆனால் தனுஷூடன் மீண்டும் இணைந்து பணிபுரிய அனிருத் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேறு வழியில்லாமல் தற்போது தனுஷ் தரப்பு யுவன்ஷங்கர் ராஜாவிடம் பேசி வருகிறதாம். அனிருத்துக்கு சரியான மாற்றாக யுவன் இருப்பார் என்றும் ஏற்கனவே தனுஷ்-யுவன் இணைந்த படங்களின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளதாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
வரும் தீபாவளிக்கு பின்னர் 'மாரி 2' படத்தின் டெக்னிக்கல் டீம் அறிவிக்கப்படவுள்ளதாகவும், அதில் யுவன் பெயர் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது