1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : சனி, 7 அக்டோபர் 2017 (20:35 IST)

9 வருடத்துக்குப் பிறகு இணையும் தனுஷ் – யுவன் சங்கர் ராஜா

9 வருடத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறார் என்கிறார்கள்.


 
 
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘மாரி 2’. ஏற்கெனவே வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக கிருஷ்ணா நடிக்க, முக்கிய கேரக்டரில் ரோபோ சங்கர் நடிக்கிறார்.
 
இந்தப் படத்துக்கு இசை அமைப்பது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. காரணம், முதல் பாகத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். தற்போது அனிருத்தும், தனுஷும் பேசிக் கொள்வதில்லை என்பதால், ‘விஐபி’ இரண்டாம் பாகத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருந்தார்.
 
ஆனால், முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்த அளவுக்கு இல்லை என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்டனர். எனவே, மறுபடியும் அவரை இசையமைக்கச் சொல்வது நன்றாக இருக்காது என்பதால், அனிருத் இசையமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 
 
ஆனால், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘யாரடி நீ மோகினி’ படம் தான் இருவரும் கடைசியாக இணைந்த படம். எனவே, மறுபடியும் இருவரும் இணையலாம் என்கிறார்கள்.