1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (17:54 IST)

’கோட்’ படம் பார்க்க லீவு கொடுக்கவில்லை.. வேலையை விட்ட இளைஞர்..!

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு லீவு கொடுக்கவில்லை என்பதற்காக வேலையை விட்டதாக இளைஞர் கூறிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரு சிலர் கலவையான விமர்சனங்களையும் அளித்து வருகின்றனர். 
 
விஜய்யின் தீவிர ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இன்றைய அனைத்து காட்சிகளிலும் இருப்பதை பார்க்க முடிந்தது. 
 
இந்த நிலையில் ’கோட்’ படம் பார்த்து வெளியே வந்து கருத்து சொல்லும் ரசிகர்களில் ஒருவர் தனது ஓனர் ’கோட்’ படம் பார்க்க லீவு கொடுக்கவில்லை என்றும் இதனால் தான் வேலையை விட்டுவிட்டு வந்து கோட் படம் பார்த்ததாகவும் இந்த படம் தனக்கு முழு திருப்தியை அளித்ததாகவும், விஜய் மாஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். 
கோட் படம் பார்க்க லீவு கிடைக்கவில்லை என்பதற்காக வேலையை விட்டு விட்ட இளைஞரின் இந்த பேட்டியில் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
Edited by Siva