செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:03 IST)

மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகும் சலூன்!

நடிகர் யோகி பாபு நடிக்கும் அடுத்த படமான சலூன் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நடிகர் யோகிபாபு தமிழில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராக இருக்கிறார். நகைச்சுவை நாயகனாகவும் சில படங்களில் படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றியும் பெற்றன. கடைசியாக அவர் நடித்த மண்டேலா படம் ஓடிடியில் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் அவரிடம் சேர்ந்தார் போல ஒரு 10 நாட்கள் கால்ஷீட் வாங்குவதே தயாரிப்பாளர்களுக்கு குதிரைக் கொம்பாக உள்ளது.

ஆனால் ஒரு இயக்குனர் மொத்தமாக 45 நாட்கள் கால்ஷீட் வாங்கியுள்ளார் சலூன் படத்தின் இயக்குனர். இவர் ஏற்கனவே யோகி பாபுவை வைத்து தர்மபிரபு என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மதுரையில் தொடங்கியுள்ளது.