1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (08:03 IST)

ஜகமே தந்திரம் படத்தால் ‘ஏலே’வுக்கு வந்த சிக்கல்! – ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

ஜகமே தந்திரம் ரிலீஸ் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் ஏலே பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி வயதான தோற்றத்தில் நடித்து வெளியாக உள்ள படம் ஏலே. இந்த படம் நாளை (பிப்ரவரி 12) அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இதை தயாரிப்பாளர்கள் ஏற்கும் வரை புதிய படங்கள் வெளியிடப்படாது என்று கூறியுள்ளதால் ஏலே படம் நாளை வெளியாக வாய்ப்பில்லாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.