என் ரசிகர்களுக்காக மீண்டும் வந்துள்ளேன்: பல ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களை சந்தித்த நடிகர் மோகன்!

papiksha| Last Updated: வியாழன், 9 ஜனவரி 2020 (15:51 IST)
தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பிறந்தார். 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வருடா  வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். 
 
இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்து புகழ் பெற்ற மோகனுக்கு பிரபல நடிகை ஒருவர் எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறி வதந்தி கிளம்பிவிட்டார்.
தனால் ரசிகர்களின் வெறுப்புக்குள்ளான மோகன் அன்றிலிருந்து சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். ஆள் அட்ரஸே இல்லாமல் இருந்துவந்த  நடிகர் மோகன் தற்போது பல வருடங்கள் கழித்து சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார்.
 
வெகுகால அமைதிக்குப் பின், சென்னை மைலாப்பூர் வி ஏ தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு செய்தி வெளியான உடனேயே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் அவரை சந்திப்பதற்கு முன்பதிவு செய்து, மிகுந்த ஆவலுடன் வந்திருந்தனர்.  
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர், சுமார் 200 பேருக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ரமேஷ், குமாரசாமி, ஜெரால்டு, அம்மாப்பேட்டை கருணாகரன், கிருபானந்தம் ஆகியோரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்து, தங்களது வாழ்வில் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்காக நன்றியும் தெரிவித்தனர்.
இதில் மேலும் படிக்கவும் :