1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 ஜூன் 2018 (11:11 IST)

அய்யயோ அவன் கூட வேண்டாம் : கதறும் யாஷிகா ஆர்மி

கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆரவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னும் நானும் ஓவியாவும் நட்புடன் பழகி வருகிறோம் என ஆரவ் தொடர்ந்து கூறி வருகிறார்.
 
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. அதில் கலந்து கொண்டுள்ள ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ நாயகி யாஷிகா ஆனந்த், ஒரு பார்ட்டியில் ஆரவ்வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உலவி வருகிறது.

 























இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த யாஷிகா ஆர்மியினர் அவனா? அவன் ஒரு மாதிரி? அவன் கூட பேசாத.. என கதறியடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 
 
அப்போது ஓவியா ஆர்மியில் இணைந்த பலர் யாஷிகா ஆர்மிக்கு மாறிவிட்டார்கள் போலும்...