ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கேஜிஎப் 2 டீசர் – நன்றி தெரிவித்த ராக்கி பாய்!

Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:31 IST)

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2
தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் வெளியானது.

வெளியாகி 24 மணி நேரர்த்தில் இந்த டீசரை 10 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும் இந்த டீசர் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையையும் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது வரை 125 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் இந்த டீசர் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பை முன்னிட்டு அந்த படத்தின் கதாநாயகன் யாஷ் டிவிட்டரில் ‘என்னுடைய ரசிகர்களுக்கு… நீங்கள் எப்போதும் என் கூட இருந்துள்ளீர்கள். அதீத அன்பை கொடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். தொடர்ந்து உங்களுக்கு நல்ல படங்களை கொடுப்பேன்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :