1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (15:44 IST)

தி லெஜண்ட் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபலம்… விரைவில் ரிலீஸ்!

சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் ஜுலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.