கங்கணா சொன்னது தவறுதான்… ஆனால் ?– ஆதரவு கொடுத்த நடிகை!

Last Modified வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:21 IST)

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகங்கள் விதிமீறி கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கங்கனா ரனாவத்தின் மும்பை வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை இடித்தது நேற்று சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக சொன்னாலும், சமீபத்தில் கங்கனா மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளதாக சொன்னதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கங்கனாவுக்கு ஆதரவாக நடிகை தியா மிர்சா குரல் கொடுத்துள்ளார். அதில் ‘கங்கணா சொல்வதையெல்லாம் நான் ஏற்கவில்லை. ஆனால் திடீரென்று ஏன் அவர் அலுவலகம் இடிக்கப்படுகிறது. விதிமீறல் இருந்தால் இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள். கடந்த சில மாதங்களாக அவர் தனிப்பட்ட நபர்களைக் குறித்து அவதூறு செய்தார். ஆனால் அதே நேரம் அவர் மீது தனிமனித தாக்குதல் நடப்பதையும் நான் விரும்பவில்லை.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :