செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (22:14 IST)

கமல்ஹாசன் படத்துக்கு வசனம் எழுதுவது யார் தெரியுமா?

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘2.0’ படத்துக்கு வசனம் எழுதப்போவது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது.
‘விஸ்வரூபம் 2’ படத்தை இயக்கி முடித்துள்ள கமல்ஹாசன், விரைவில் அதை வெளியிடுவதற்கான பணிகளைச் செய்து வருகிறார். அவர் இயக்கி, நடிக்கும்  ‘சபாஷ் நாயுடு’ படம் வேறு பாதியில் நிற்கிறது. அடுத்து அந்தப் படத்தை முடிப்பாரா அல்லது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கப்  போய்விடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
 
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்துக்கு வசனம் எழுதப்போவது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் தான் அவர். சுஜாதா உயிருடன் இருந்தவரை, அவர்தான் ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதுவார். அவர் இறந்துவிட்டதால் ஜெயமோகனைப் பயன்படுத்தி வருகிறார் ஷங்கர்.
 
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்துக்கும் ஜெயமோகன் தான் வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்  நடிக்கும் ‘தளபதி 62’ படத்துக்கும் அவர்தான் வசனம் எழுதியுள்ளார்.