வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified புதன், 1 பிப்ரவரி 2023 (09:43 IST)

சசிகுமாரின் ‘அயோத்தி’ படத்தின் மீது கதை திருட்டு சர்ச்சை… பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு!

நடிகர் சசிகுமார் நடிப்பில் அயோத்தி என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் சமீபத்தில் அந்த படத்தின் டீசர் ரிலீஸானது.

சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படம். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்போது சிறுகதை, கவிதை மற்றும் நாவல் என பல தளங்களில் செயல்பட்டு வரும் எழுத்தாளர் நரன் இப்போது இந்த படத்தின் கதை தன்னுடையது என குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தன்னுடைய சரீரம் என்ற சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம்பெற்ற வாரணாசி என்ற சிறுகதையின் கதையை திருடி அயோத்தி படத்தை எடுத்துள்ளனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாரணாசி சிறுகதை ஒரு பெண் தன்னுடைய இறந்த கணவனின் உடலை தகனம் செய்ய வாரணாசிக்கு எடுத்து செல்லும் பயணத்தை சொல்வதாகும். அயோத்தி படத்தின் டீசரிலும் இதையொத்த காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.