வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (08:00 IST)

முந்தானை முடிச்சு ஷூட்டிங் எப்போது?... தாமதம் ஆனது ஏன்?

பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. இதையடுத்து இப்போது இந்த திரைப்படத்தை 37 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்ய உள்ளனர்.

இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தை சசிகுமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டே அறிவிகக்ப்பட்டது இந்த படம். ஆனால் இதுவரை ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தது. இப்போது மார்ச் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.