திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (08:13 IST)

உலகிலேயே முதல் முறையாக... 12 மொழிகளில் வெளியாகும் RRR!

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள  ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் 12 மொழிகளில் வெளியாகும்.

 
தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி.
 
இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முன்னதாக இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பட ரிலீஸுக்கு ஒரு வருட இடைவெளி உள்ள நிலையில் இந்த படத்தை உலக மொழிகளான ஆங்கிலம், போர்ச்சுகீஷ், ஸ்பானிஸ், துருக்கி, ஜப்பான், கொரியன் மற்றும் சீன மொழிகளில் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
உலகம் முழுவதும் 12 மொழிகளில் வெளியாகும் முதல் திரைப்படமாக ஆர்.ஆர்.ஆர். உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் உரிமையை பெற ஜீ5 மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போட்டி போட்டுக்கொள்வதாக தெரிகிறது.