திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 மார்ச் 2018 (15:30 IST)

உடை மாற்றும் அறையில் ஓட்டை: பகீர் புகார் கூறிய பிரபல நடிகை

அமெரிக்காவில் வொண்டர் உமன்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் லிண்டா கார்டர். 1970களில் இந்த தொலைக்காட்சி தொடர் அமெரிக்கா முழுவதும் பிரபலம். இந்த சீரியலில் டயானா பிரின்ஸ் என்ற கேரக்டரில் நடித்து பெரும் புகழும் பணமும் சம்பாதித்தவர் லிண்டார் கார்டர்

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தபோது தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை கூறினார். வொண்டர் உமன் சீரியலில் நடித்து கொண்டிருந்தபோது தான் உடை மாற்றும் அறையில் ஒருவர் ஓட்டை போட்டு உடைமாற்றுவதை பார்த்ததாகவும், பின்னர் அவர் அந்த சீரியலின் கேமிராமேன் என்று தெரிய வந்ததாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறினார். அந்த கேமிராமேனை சீரியல் குழுவினர் வேலையை விட்டு நீக்கிவிட்டாலும், தான் அந்த தொடர் முடியும்வரை பயந்து கொண்டே நடித்ததாகவும் கூறினார்.

மேலும் தனக்கு ஒரு நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஆனால் அவருக்கு கடவுள் தக்க தண்டனை வழங்கிவிட்டதால் அவர் குறித்து வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்துவிட்டதால் இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு இனி ஒரு அச்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.