1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (10:05 IST)

தூக்க கலக்கத்தில் நடந்துவிட்டது.. நிவின்பாலி மீது குற்றஞ்சாட்டிய பெண் அந்தர் பல்டி..!

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றம் காட்டிய பெண் ஒருவரிடம் மீண்டும் விசாரணை செய்தபோது தூக்க கலக்கத்தில் தான் தேதியை மாற்றி தெரிவித்து விட்டதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி துபாயில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் நடந்த தேதியையும் அவர் குறிப்பிட்டு இருந்த நிலையில் அதே தேதியில் நிவின் பாலி கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்ததற்கான ஆதாரம் காவல்துறையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து இளம் பெண் கூறிய புகார் பொய் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவரிடம் மேலும் விசாரணை செய்யப்பட்டது. அப்போது பாலியல் புகார் கொடுத்த பெண், தான் தூக்க கலக்கத்தில் தேதியை மாற்றி கூறிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நிவின் பாலி தன் மீதான குற்றச்சாட்டு பொய் என்றும் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் சட்டப்படி தன் மீதான குற்றச்சாட்டை சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார்.

Edited by Siva