திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:33 IST)

விஜய் - அஜித் சந்திப்பு நிகழுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அஜித் மற்றும் விஜய் சந்திப்பு நடைபெறுமா என இரு முன்னணி நடிகர்களும் இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் சமகால நடிகர்கள் என்பதால் இருவரும் நண்பர்கள். ஆனால் இவர்களின் ரசிகர்கள் எப்போதும் டுவிட்டரில் ஹேஸ்டேக் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்- பூஜா ஹெக்டே நடித்துவரும் பீஸ்ட் படத்தின் காட்சிகள் ரஷ்யாவில் நடைபெறவுள்ளதாகவும், அதேபோல், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் வலிமை படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் , விஜய் , அஜித் ஆகிய இருவரும் ரஷ்யாவில் சந்தித்துக் கொள்வார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

ஏற்கனவே மங்காத்தா படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும்போது, விஜய் வேலாயுதம் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது இருவரும் சந்தித்து நட்பு பாராட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.