வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (19:01 IST)

சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா?

Surya42
எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் “கங்குவா” டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டது,

இப்படத்தின் கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுத்தை சிவா- சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ள  நிலையில், டீசர் வரும் ஜூலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  இப்படம்  ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் முதல் தமிழ்படமாக இருக்கலாம் என்ற சினிமா விமர்சனகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.