நேருக்கு நேர் படத்தில் அஜித் வேண்டாம் என சொன்ன மணிரத்னம்!
இயக்குனர் வசந்த் சூர்யாவை 1996 ஆம் ஆண்டு சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் அறிமுகப்படுத்தினர். ஆனால் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அஜித்தைதான் இயக்குனர் வசந்த் தேர்வு செய்திருந்தார்.
அஜித்தும் அந்த படத்தில் 10 நாட்கள் வரை நடித்திருந்தார். ஆனால் அவருக்கும் தயாரிப்பாளர்களான மணிரத்னம் மற்றும் சுஹாசினி ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அந்த படத்தில் இருந்து விலகிய்தாக அந்த படத்தில் இணை இயக்குனராக இருந்த நடிகர் மாரிமுத்து கூறியுள்ளார்.
மேலும் அஜித்தை எப்படியாவது சமாதானம் செய்து நடிக்க வைப்பதாக இயக்குனர் வசந்த் கூறிய போதும், மணிரத்னமும் சுஹாசினியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் கூறியுள்ளார்.