வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (09:43 IST)

சிம்பு படத்தை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

இயக்குனரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த இதுவரை இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ”3 ”மற்றும் ”வை ராஜா வை” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரிதாக சோபிக்காததால் தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் முசாஃபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் மார்ச் 8 ஆம் தேதி இணையத்தில் வெளியானது. அடுத்தடுத்து தனது சினிமா பணிகளில் கவனம் செலுத்திவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கியுள்ளார்.

அவர் இயக்க வுள்ள அடுத்த படத்தில் சிம்பு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாடு படத்துக்கு பிறகு சிம்பு அதிக படங்களில் நடிக்க வரிசையாக கமிட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.