ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முசாஃபிர் ஆல்பம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வந்த முசாஃபிர் இசை ஆல்பத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரிதாக சோபிக்காததால் தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் முசாஃபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் மார்ச் 8 ஆம் தேதி இணையத்தில் இந்த ஆல்பம் வெளியாகும் என அறிவிகக்ப்பட்டுள்ளது.
தமிழில் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தியில் அங்கித்தும், மலையாளத்தில் ரஞ்சித்தும், தெலுங்கில் சாகரும் பாடியுள்ள இந்த பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார்.