சந்தானத்தோடு இணைகிறாரா கவுண்டமணி ? – கோலிவுட் டாக் !

Last Modified செவ்வாய், 18 ஜூன் 2019 (15:37 IST)
காமெடி மன்னன்களான கவுண்டமணியும் சந்தானமும் ஒருப் படத்தில் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடிவேலுவின் திரை அஸ்தமனத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் சந்தானம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உச்சத்தில் இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஹீரோ ஆசை வரவே காமெடியனாக நடிப்பதில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஹீரோவாகவே நடித்து வருகிறார். அவர் நடுத்த பெருவாரியான படங்கள் தோல்வி அடைந்தாலும் சந்தானத்துக்கு இன்னமும் ஹீரோ ஆசை விடவில்லை.

இந்நிலையில் அவர் அடுத்ததாக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்க சந்தானம் கவுண்டமணியை அணுகியுள்ளார். ஆனால் கவுண்டமணியோக் கதையைக் கேட்டுவிட்டு இன்னமும் எந்த பதிலும் சொல்லவில்லை எனப் படக்குழுக் காத்துக்கொண்டிருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :