1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (15:12 IST)

கில்மாவாக ஜல்சா பண்ணும் யாஷிகா- யோகி பாபுவின் "ஜாம்பி" டீசர்!

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.


 
கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு. 
 
சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. கூர்கா, தர்ம பிரபு என அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் படங்களில் யோகி பாபு லீடிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  
 
அந்தவகையில் தற்போது இவர் நடித்துள்ள ‘ஜாம்பி’ படத்தின் டீசர்  இணையத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் புவன் த்ரில்லர் காமெடி ஜானரில் இயக்கியுள்ள இப்படத்திற்கு  பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். யோகி பாபு லீட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகர், ப்ளாக் ஷீப் குழுவை சேர்ந்த அன்பு, மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
சமீபத்தில் இப்படத்தி பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில் நேற்று இப்படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.