திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:23 IST)

கோபத்தை மறந்து விஜய்யோடு நடிப்பாரா நயன்தாரா??

நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியது.
 
விஜய் தனது அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளார். இதற்கு முன்பு மகேஷ்பாபுவை வைத்து இயக்கிய ஸ்பைடர் படம் தோல்வி அடைந்ததால், விஜய்யுடன் இணையும் படத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.
 
எனவே, விஜய் படத்தின் திரைக்கதையிலும் மற்ற விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இப்படி முருகதாஸ் அதிக கவனம் செலுத்தும் விஷயத்தில் ஹீரோயின் தேர்வும் உள்ளது. 
 
விஜய் ஜோடியாக சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், நயன்தாரா ஆகியோரின் பெயர் அடிபடுகிறது. சமந்தா, ரகும் ஆகியோரை அனுகினால் எளிதில் வேலை முடியும் என்றாலும் நயன்தாரா தற்போது முன்னனி நடிகையாக உள்ளதால் கவனம் அவர் மீது திரும்பியுள்ளதாம். 
 
ஆனால், நயன்தாரா பழைய கோபத்தை மறந்து முருகதாஸ் படத்தில் நடிப்பாரா என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி. கஜினி படத்தில் நடித்த போது முருகதாஸ் நயன்தாராவை டம்மியாக காட்டியதால் சற்று வருத்தத்தில் இருந்தாராம்.
 
இதற்கு பின்னர் நயன்தாரா முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இதனால் இந்த படத்தையும் நிராகரித்துவிடுவாரோ என்ற யோசனையும் உள்ளதாம் படக்குழுவினருக்கு.