செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2024 (15:52 IST)

மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்? ஆஸ்கர் விருதில் ஆடுஜீவிதம்!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆடுஜீவிதம் திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் இணைந்துள்ள நிலையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

 

 

தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கே புதிய அடையாளத்தை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இசையில் பல புதுமைகளை படைத்த ஏ.ஆர்.ரஹ்மான். 

 

கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று, ஆஸ்கர் வெல்லும் முதல் இந்தியர், தமிழர் என்ற சாதனையை படைத்தார்.

 

அதை தொடர்ந்து 2011ல் இவர் இசையமைத்த 127 ஹவர்ஸ் என்ற படமும் சிறந்த இசைக்கு நாமினேட் செய்யப்பட்டது. ஆனால் விருது பெறவில்லை. இந்நிலையில் தற்போது பிரித்விராஜ் நடித்து வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளது. 
 

 

2025ம் ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் சிறந்த பாடல் பிரிவில் ஆடுஜீவிதம் படத்தின் இஸ்திக்ஃபர், புது மழா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்னணி இசை பிரிவில் 146 படங்கள் போட்டியிடுகின்றன. இதில் 15 பாடல்களும், 20 பின்னணி இசை பரிந்துரைகளும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகும். நீண்ட காலம் கழித்து ஏ ஆர் ரஹ்மான் மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K