1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2024 (11:52 IST)

பிக்பாஸ் வரலாற்றில் சாதனை.. முதன்முதலாக டைட்டில் வின்னரான வைல்டு கார்டு போட்டியாளர்..!

Archana
பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கான எபிசோட் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இதில் அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டம் பெற்றுள்ளதாகவும் மணி இரண்டாவது இடத்தையும் மாயா மூன்றாவது இடத்தையும் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது

விஜய் டிவியில் இன்று மாலை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் எண்ட்ரியாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

பிக் பாஸ் முதல் சீசன் இருந்து ஏழாவது சீசன் வரை வைல்ட் எண்ட்ரி ஆக வந்த ஒருவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றது இதுவே முதல் முறை என்பதால் இது ஒரு சாதனையாகவே பாரதப்படுகிறது

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெறும் அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சில பரிசுகள் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva